உள்ளூர் செய்திகள்
ஊத்தங்கரையில் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட பெண் சிறையில் அடைப்பு
- பொதுமக்களிடம் பேசுவது போல அவர்களின் மனதை திசை திருப்பி அவர்களிடம் இருக்கும் பணம், கைபேசி, தங்க நகை போன்றவற்றை பெண் மோசடி செய்துள்ளார்.
- அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரத்தை பறிமுதல் செய்து, ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களிடம் பேசுவது போல அவர்களின் மனதை திசை திருப்பி அவர்களிடம் இருக்கும் பணம், கைபேசி, தங்க நகை போன்றவற்றை கொள்ளையடித்து வந்த பெண் ஒருவர் மீது ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஊத்தங்கரை டி.எஸ்.பி. அமலா அட்வின் உத்தரவின்பேரில் தேடப்பட்டு வந்த அந்த பெண் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த நந்தினி (வயது 29) என்பது தெரியவந்தது.
இதை அடுத்து அந்த பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரத்தை பறிமுதல் செய்து, ஊத்தங்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.