உள்ளூர் செய்திகள்

தோட்டக்கலை பண்ணையில் மா மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதை படத்தில் காணலாம்.

திம்மாபுரம் பண்ணையில் இயற்கையான முறையில் விளைந்த மா-காய்கறிகள் விற்பனை

Published On 2022-06-15 14:33 IST   |   Update On 2022-06-15 14:33:00 IST
  • பொது மக்களுக்கு நேரிடையாக மொத்தமாகவும் சில்லறை யாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
  • பண்ணையில் ஜூஸ் வகைகள் முள்ளங்கி, சுரைக்காய், கத்தரி போன்ற காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகளான மாதுளை, சப்போட்டா, வாழை போன்ற பயிர்கள் இயற்கை உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரதில் அரசு சார்பில் தோட்டக்கலைத் துறையின் பழத்தோட்டம் உள்ளது. இந்த பழத்தோட்டம் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இதில் 10 ஏக்கர் அளவில் மா உற்பத்தி சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு 36 வகையான மா மரங்கள் செந்தூரா, ரூமேனி, காளபட்டு, நீலம், பெங்களுரா, மல்கோவா உள்பட பல வகையான மாமரங்கள் இயற்கையான உரங்கள் மூலம் வளர்க்கப்பட்டு வருகிறது.

மேலும் இப் பண்ணையில் ஜூஸ் வகைகள் முள்ளங்கி, சுரைக்காய், கத்தரி போன்ற காய்கறிகள், கீரை வகைகள், பழ வகைகளான மாதுளை, சப்போட்டா, வாழை போன்ற பயிர்கள் இயற்கை உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

அனைத்து விதமான பழங்கள் காய்கறிகள் கீரைகளை அரசு சார்பில் இறங்கி வரும் டான்ஹோடா நிறுவனம் மூலம் குறைந்த விலையில் நேரடியாக பொதுமக்கள் பயனடைய வகையில் தோட்டக்கலை பண்ணை வாயிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தோட்டக் கலைத்துறை பண்ணை அலுவலர் சுகதேவ் கூறும்போது தற்போது இப்பண்ணையில் விளை யும் அனைத்து விதமான காய்கறிகள் பூக்கள் இயற்கையான உரங்கள் மூலம் பாதுகாப்பான முறையில் பயிரிடப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்பு இங்கு வளரும் விளைபொருட்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது டான்ஹோடா நிறு வனம் மூலம் பொது மக்களுக்கு நேரிடையாக மொத்தமாகவும் சில்லறை யாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் அரசுக்கு நேரடியாக வருவாய் கிடைக்கிறது. அதே போல் இங்கு விளைநிலங்களுக்கு உயிர் உரங்கள் மற்றும் மா, தென்னை, வாழை, பூ செடி வகைகள், விதைகள் தரமானதாக உற்பத்தி செய்து குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.

இதை பொதுமக்கள் விவசாயிகள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினார். அப்போது உடன் உதவி தோட்டக்கலை அலுவலர் விஜயகுமார் உள்ளிட்ட தோட்டக்கலையினர் உடனிருந்தனர். 

Similar News