உள்ளூர் செய்திகள்
கோவில் திருவிழாவில்ரகளை செய்த 2 பேர் கைது
- இவர்களுக்குள் அத்திமுகம் முனீஸ்வரன் கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.
- தகராறில் கையாலும் ஹாக்கி ஸ்டிக்காலும் கொண்டு கோவிந்தராஜ் மற்றும் முரளி மோகனை தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள அத்திமுகம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜு (வயது28), அதே பகுதியைச் சேர்ந்த வினய்தேஜா (22), வினோத் குமார் (26). இவர்களுக்குள் அத்திமுகம் முனீஸ்வரன் கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறில் கையாலும் ஹாக்கி ஸ்டிக்காலும் கொண்டு கோவிந்தராஜ் மற்றும் முரளி மோகனை தாக்கியுள்ளனர். இதில் இருவரும் காயம் அடைந்து ஓசூர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து வினய்தேஜா மற்றும் வினோத்குமாரை கைது செய்தனர்.