உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2023-08-18 13:31 IST   |   Update On 2023-08-18 13:31:00 IST
  • பெரியாண்டவர் சாமி கரகம் ஜோடிக்கப்பட்டு, வான வேடிக்கையுடன், அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் பில்லம நாயக்கன்பட்டி அருகே கஸ்தூரி நாயக்கன்பட்டி உள்ளது. இங்கு பெரி யாண்டவர்,கஸ்தூரி அம்மன், முனிசாமி ஆகிய கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் 12ஆண்டு களுக்கு பிறகு ஆடி திருவிழா நடைபெற்றது.

கடந்த 1ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை பெரியாண்டவர் சாமி கரகம் ஜோடிக்கப்பட்டு, வானவேடிக்கையுடன், அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கதிர் நரசிங்க பெருமாளுக்கு பொங்கல் வைத்து அபிஷேக ஆரா தனை மற்றும் முனிசாமி கோவிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி அபி ஷேக ஆராதனை நடை பெற்றது.

பின்னர் பெரியாண்டவர் கோவில் முன்பாக நூற்று க்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் ஆபரண பெட்டி, பெரி யாண்டவர் கரகம், முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகே உள்ள கங்கையில் விடப்பட்டது. இதில் நூற்று க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா விற்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News