உள்ளூர் செய்திகள்

பையூர் ஏரியில் மீன்கள் செத்து கிடப்பதால் துர்நாற்றம்

Published On 2022-06-20 15:26 IST   |   Update On 2022-06-20 15:26:00 IST
  • தினமும் 100 கிலோ மீன்கள் பிடிக்கப்படும் சனி ஞாயிறுகளில் 2 டன் அளவுள்ள மீன்கள் ஏரியிலிருந்து பிடித்து விற்பனை ஆவதாக தெரிகிறது.
  • ஏரிக்கு வரும் வழியில் தனியார் மாங்கூழ் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நீர் முறையாக சுத்தம் செய்யாமல் அப்படியே ஏரியில் கலக்க விடுகின்றனர்.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த பையூர் வண்ணாங் குட்டை ஏரி உள்ளது இது 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ரோகு, கட்லா, மெர்க்கால், ஜிலேபி, உள்ளிட்ட மீன்வகைகள் ஏரியில் வளர்க்கப்படுகிறது.

தினமும் 100 கிலோ மீன்கள் பிடிக்கப்படும் சனி ஞாயிறுகளில் 2 டன் அளவுள்ள மீன்கள் ஏரியிலிருந்து பிடித்து விற்பனை ஆவதாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஏரியில் அதிகளவு மீன்கள் செத்து போய் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

வீட்டில் நிம்மதியாக சாப்பிட முடிவதில்லை. தூங்க முடியவில்லை. துர்நாற்றம் அதிக அளவில் இருந்ததால் எதை சாப்பிட்டாலும் அடிக்கடி வாந்தி எடுத்துக் கொண்டு உள்ளனர். இதனையடுத்து ஏரியின் மீன்பிடி குத்தகைதாரரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தற்போது தண்ணீர் மாசடைந்து உள்ளது. தற்போது பெய்த மழை காரணமாக ஏரிக்கு வரும் தண்ணீர் மிகவும் மாசடைந்து காணப்படுகிறது.

ஏரிக்கு வரும் வழியில் தனியார் மாங்கூழ் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நீர் முறையாக சுத்தம் செய்யாமல் அப்படியே ஏரியில் கலக்க விடுகின்றனர். ஏரி மிகவும் மாசடைந்து காணப்படுகிறது. ஏரியில் அமோனியா வாயு மிக அதிக அளவில் கலந்துள்ளது. ஏரி தண்ணீரில் ஆக்சிஜன் மிக குறைந்த அளவு காணப்படுவதால் மீன்கள் சுவாசிக்கும் தன்மை குறைந்து வருவதால் மீன்கள் அதிக அளவு இறப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது .

அமோனியா வாயு வெளியேறி தண்ணீரில் ஆக்சிஜன் அளவு கூடும் இருந்தாலும் மழை அதிக அளவு பொழிந்தால் மட்டுமே ஏரியில் உள்ள மீன்களை காப்பாற்ற முடியும். இதனால் நாங்களும் நஷ்டம் அடைந்துள்ளோம்என தெரிவித்தார்.

மேலும் இந்த ஏரியில் இருந்து போர் அமைத்து குடிநீருக்காக தண்ணீர் எடுக்கின்றனர். அந்த தண்ணீரும் மாசடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த ஏரியிலிருந்து செல்லும் தண்ணீர் மேலும் மூன்று ஊர்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு ஏரியில் செத்துக் கிடக்கும் மீன்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News