கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையில்கோடை மகிழ்ச்சி முகாம் நிறைவு விழா
- சிறப்பாக செயல்பட்ட மாணவர்களை பாராட்டி கேடயங்களை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து, மாணவர்களுக்கு தேனீர் விருந்தளித்தார்.
- மாணவ, மாணவியர்களுக்கு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வை தொடங்கி வைத்து, மஞ்சப்பைகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம் சிறப்பு முகாம் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
இந்த சிறப்பு முகாமின் நிறைவு விழா நேற்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்வளத்துறை விருந்தினர் மாளிகை வளாகத்தில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் சரயு பங்கேற்று, முகாமில் பங்கேற்று ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களை பாராட்டி கேடயங்களை வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து, மாணவர்களுக்கு தேனீர் விருந்தளித்தார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், கோடை மகிழ்ச்சி கொண்டாட்டம் சிறப்பும் முகாம் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
முன்னதாக மாவட்ட கலெக்டர், ஓசூர் மாநகராட்சி ஆணையர் ஓசூர் சார் ஆட்சியர் ஆகியோர் தங்களது ஆரம்ப கால கல்வி முதல், இந்திய குடிமை பணித் தேர்வு வரை தாங்கள் கடந்து வந்த பாதைகள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினர்.
இம்முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவியர்கள் தங்கள் பார்வையிட்ட நிகழ்வுகள் குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற கைகளை இழந்த மாணவர்கள் கீர்த்தி வர்மா மற்றும் கண்பார்வை இழந்த ஓசூர் நல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி ரியாஸ்ரீ ஆகியோரை மாவட்ட கலெக்டர் பாராட்டி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பாக மாணவ, மாணவியர்களுக்கு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வை தொடங்கி வைத்து, மஞ்சப்பைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, மாவட்ட கல்வி அலுவலர் மணிகேமலை, தனி தாசில்தார் விஜயகுமார், கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், கல்வித்துறை அலுவலர்கள் வெங்கடேசன், அப்துல்சர்தார், கணேசன், சுதாகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன், மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், டாடா நிறுவன அதிகாரி பதி மற்றும் வீரேஷ், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.