உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் உலக மகளிர் தின விழா

Published On 2023-03-09 09:56 GMT   |   Update On 2023-03-09 09:56 GMT
  • பெண்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும்.
  • அன்பு உள்ளத்தில் அன்னை தெரசா போல, வீரத்தில் வேலு நாச்சியார் போல விளையாட்டில் பி.வி சிந்து போல வெற்றிகளை குவிக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவி மீனா வரவேற்றார். கல்லூரி முதல்வர் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது, பெண்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும். அதன் மூலம் குடும்பமும், நாடும் சிறக்கும். அன்பு உள்ளத்தில் அன்னை தெரசா போல, வீரத்தில் வேலு நாச்சியார் போல விளையாட்டில் பி.வி சிந்து போல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று பேசினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி கூடுதல் வழக்கறிஞர் சவுந்தரி சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும் போது பெண்கள் எதையும் தாங்கும் மனவலிமை பெற வேண்டும் என்று பேசினார்.

ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் பரிமளா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், மாணவிகள் குறிக்கோளை அடைய கடுமையாக உழைத்திட வேண்டும் என்றார். பெண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குனர் மீனாட்சி தொலை நோக்கு பார்வையில் சிந்தித்து மாணவிகள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.

இதில் கவிதை, கட்டுரை, பேச்சு ,ஓவியப் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன. கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவி கிருத்திகா, கணினி அறிவியல் துறைத்தலைவி ராஜலட்சுமி ஆகியோர் விழா ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

இதில் அனைத்து துறை பேராசிரியைகளும் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரியின் உயிர் தொழில்நுட்பவியல் உதவிப் பேராசிரியை கரோலின் ரோஸ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News