கொள்ளிடத்தில், ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
- 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 3 வகுப்புகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது.
- மாணவர்கள் அந்தந்த வகுப்புக்கு ஏற்றவாறு தங்கள் கற்றல் திறனை பெறுவர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளி டத்தில் ஆசிரியர்களுக்கு நடந்த எண்ணும், எழுத்தும் பயிற்சின்போது மாணவர்கள் பாடங்களை எளிதில் புரிந்துக்கொள்ளும் வகையில் நடனவழி கல்வி பயிற்சி ஆகியவை அளிக்கப்பட்டது.
சீர்காழி வட்டம் கொள்ளிடம் அருகே துளசேந்திரபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவிலான தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மூன்று வகுப்புகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்ச்சியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள், நடனவழி கல்வி மற்றும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடத் திட்டங்களை எவ்வாறு கற்றுத் தருவது என்பன உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இதில் குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் காமராஜ், வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, தலைமை ஆசிரியர் பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினர்.
தொடர்ந்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி பேசுகையில், தமிழ்நாடு அரசால் கரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்ய 2022-23ல் அறிமுகப் படுத்தப்பட்ட எண்ணும், எழுத்தும் திட்டத்தில் மாணவர்களின் அடிப்படைத் திறன்கள் வலுவூட்டப்பட்டன. 2023-24 ஆம் ஆண்டில் மாணவர்கள் வகுப்பு நிலைக்கேற்றவாறு கற்றல் திறனை அதிகரிக்க மேம்படு த்தப்பட்ட நிலைவாரியான கற்பித்தல் அனுகு முறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் அந்தந்த வகுப்புக்கு ஏற்றவாறு தங்கள் கற்றல் திறனை பெறுவர். இப்பயிற்சியை ஆசிரியர்கள் முழுமையாக பெற்று மாணவர்களின் கற்றலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார். பயிற்சியில் கொள்ளிடம் வட்டாரத்தைச் சேர்ந்த அனைத்து துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் வந்து கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் ஐசக்ஞானராஜ் நன்றி கூறினார்.