உள்ளூர் செய்திகள்
ஓசூர் பஸ் நிலையத்தில் குட்கா பொருட்களுடன் வாலிபர் கைது
- சந்தேகத்திற்கு இடமாக பஸ் நிலையத்தில் நின்றார்.
- 31 கிலோ குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரிவி வந்தது.
ஓசூர்,
போலீசார் பஸ் நிலைப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை சோதனை செய்ததில் அவர் பையில் 31 கிலோ குட்கா பொருட்கள் வைத்திருந்தது தெரிவி வந்தது.
இதன் மதிப்பு ரூ.20,000ஆகும். மேலும் விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம் நெல்வாடியை சேர்ந்த வினோத்குமார்(29) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.