வெவ்வேறு இடங்களில்விவசாயிகள் 2 பேர் தற்கொலை
- விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர்கள் நவீன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம் கடத்தூர் சாலநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி. இவரது மனைவி தங்கா. இவர்களுக்கு வேல்முருகன் (வயது34) என்ற மகன் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வேலுமணி இறந்து விட்டார். இதன்காரணமாக வேல்முருகன் தனது சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். விவசாயம் செய்வதற்காக வேல்முருகன் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த கடனை அவர் திருப்பி செலுத்த முடியாததால் மனவிரக்தியில் காணப்பட்டார். அப்போது அவரது தாய் தங்கா அவருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிலையில் நேற்று மதியம் தங்கா தோட்டத்திற்கு சென்றுவிட்டார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த வேல்முருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாய் தங்கா கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்ார். உடனே போலீசார் அங்கு விரைந்து வேல்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி சூடனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் நவீன் (வயது23). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நவீன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து நவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.