முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வழங்கினார்.
தருமபுரி முதியோர் இல்லத்தில் தடங்கம் சுப்பிரமணி பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- தடங்கம் சுப்பிரமணி முன்னதாக அங்கு தயாராக வைக்க ப்பட்டிருந்த கேக்கினை வெட்டினார்.
- முதி யோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் உள்ள தகடூர் மாதர் சங்கம் என். வி. விசாலாட்சி அம்மாள் நினைவு முதி யோர் இல்லத்தில் உதயா பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பில் தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்பிரமணி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதி யோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உதயா பவுண்டேஷன் டிரஸ்ட் இயக்குனரும், தி.மு.க. மாவட்ட துணை செயலாளருமான ரேணுகாதேவி தலைமை வகித்தார்.
தி.மு.க. மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகரச் செயலாளர் நாட்டான் மாது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதியோர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புடவைகள் மற்றும் மளிகை சாமான்கள் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வழங்கினார். முன்னதாக அங்கு தயாராக வைக்க ப்பட்டிருந்த கேக்கினை வெட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் உதயா பவுண்டேஷன் டிரஸ்ட் இணை இயக்குனர் அனந்த லட்சுமி, உறுப்பினர்கள் காயத்ரி, கலா, இந்துமதி, சுகன்யா, சந்தியா, மற்றும் நகர மகளிர் அணி செயலாளர் ராதா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.