தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் கணவன்-மனைவி தீக்குளிக்க முயற்சி
- மகேஸ்வரி உடல் மீது மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
- பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து உடனே ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்ைட அருகே உள்ள வடக்கு தெரு கொட்டாவூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது58). விவசாயியான இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் நேற்று மாலை தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது ராஜா மறைத்து வைத்திருந்த மண்எண்ணை கேனை எடுத்து அவர் மீதும், அவரது மனைவி மகேஸ்வரி மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பார்த்து உடனே ஓடி வந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.
அதன்பின்னர் ராஜா விடம் போலீசார் விசா ரணை நடத்தியதில், அவ ருக்கு சொந்தமான நிலத்தை உறவினர் ஒருவர் அபகரிக்க முயற்சி செய்கிறார் என்றும், இதுகுறித்து ராஜா போலீசாரிடம் பலமுறை புகார் தெரிவித்தும், எநத வித நடவடிக்கையும் எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ராஜா கொடுக்கும் புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து ராஜா தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் தனது சொத்தை அபகரிக்க முயற்சி செய்யும் உறவினர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நேரத்தில் கணவன்-மனைவி இரு வரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.