உள்ளூர் செய்திகள்

அக்கரைவட்டத்தில் உழவர் வயல் தினவிழா நடந்தது.

அக்கரைவட்டத்தில், உழவர் வயல் தினவிழா

Published On 2023-06-07 09:55 GMT   |   Update On 2023-06-07 09:55 GMT
  • ஆழ்குழாய் வசதி கொண்ட விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.
  • தென்னையில் நோய் மற்றும் பூச்சியின் கட்டுப்பாட்டு முறைகளை எடுத்துரைத்தார்.

திருவோணம்:

தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் வட்டாரம் அக்கரைவட்டம் கிராமத்தில் உழவர் வயல் தின விழா நடைபெற்றது.

விழாவில் வேளாண்மை உதவி இயக்குனர் கணேசன் பேசியதாவது:-

குறுவை சாகுபடி நெல் சாகுபடியில்மற்ற பருவங்களை விட குறுவையில் கூடுதல் மகசூல் பெறுவதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை உள்ளதால் ஆழ்குழாய்வசதி கொண்ட விவசாயிகள் தற்போது நெல் சாகுபடி மேற்கொண்டுள்ளனர்.

குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூலை பெற வேண்டும்.

குறுகிய கால ரகங்களான ஆடுதுறை 37, ஆடுதுறை 53, ஏஎஸ்டிடி 16 டி பி எஸ், கோ 5, போன்ற குறைந்த வயதுடைய ரகங்களின் சான்று பெற்ற விதைகளை குறுவை பருவத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

தென்னையில் நோய் மற்றும் பூச்சியின் கட்டுப்பாட்டு முறைகளையும் எடுத்துரைத்தார்.

முன்னதாக அக்கரை வட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கண்ணையன் வரவேற்றார்.

விழாவில் உதவி வேளாண்மை அலுவலர் பதிராஜன், வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் முத்துக்குமரன், உதவி தொழில் நுட்ப மேலாளர் அணு, பவதாரணி, ஊராட்சி செயலர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி உறுப்பினர்கள் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News