உள்ளூர் செய்திகள்

முத்துப்பேட்டை போலீஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போலீஸ் நிலையம் முன்பு பெண் குழந்தையுடன் போராட்டம்

Published On 2023-09-28 09:52 GMT   |   Update On 2023-09-28 09:52 GMT
  • குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
  • முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் என்கிற உமர் முகமது(43). வக்கீல். இவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் உமர் முகமது மற்றும் அவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த ர் உமர் முகமது தனது மனைவியை சரிமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் ஹாஜா ஜெய்னுல் அரபா மயங்கினார். இதைத் தொடர்ந்து உமர் முகமது தலைமறைவாகி விட்டார்.

மறுநாள் ஹாஜா ஜெய்னுல் அரபாவிடமிருந்து போன் ஏதும் வராததை கண்ட அவரது பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டிற்குள் படுகாயத்து டன் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் உமர் முகமது மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் ஹாஜா ஜெய்னுல் அரபா மற்றும் அவரது இரு குழந்தைகள் மற்றும் அவரது உறவினர்கள் நேற்றிரவு முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு அமர்ந்து உமர் முகமதுவை கைது செய்யகோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏறபட்டது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் இரவுக்குள் கைது செய்கிறோம் என வாக்குறுதியளித்தார்.

இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பின்னர் போலீசார் நேற்றிரவு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் சப் இன்ஸ்பெ க்டர்கள் பாலசுப்பிரமணியம் முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் மன்னார்குடியில் தலைமறைவாக இருந்த உமர் முகமதுவை கைது செய்து அழைத்து வந்து திருத்துறைப்பூண்டி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News