உள்ளூர் செய்திகள்
தீபாவளி இனாம் கேட்ட தீயணைப்பு வீரர் சஸ்பெண்டு
- தீபாவளி வசூலில் அதிகாரி மற்றும் பணியாளர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல்:
தீபாவளி பண்டிகையையொட்டி அரசு சார்ந்த அலுவலகங்களில் தீபாவளி வசூலில் அதிகாரி மற்றும் பணியாளர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராசிபுரத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் தீபாவளி பண்டிகைக்கு நாமக்கல் தீயணைப்பு துறையை சேர்ந்த திருமுகம் என்பவர் இனாம் கேட்டதாக ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இைதயடுத்து திருமுகத்தை சஸ்பெண்டு செய்து தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் செந்தில் உத்தரவிட்டுள்ளார்.