உள்ளூர் செய்திகள்

பாலத்தில் வாகனங்கள் செல்வதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

மண்ணி ஆற்றுப்பாலம் உள்வாங்கியதால் புழுதிக்குடியில் போக்குவரத்து பாதிப்பு

Published On 2022-06-19 09:37 GMT   |   Update On 2022-06-19 09:37 GMT
  • கனரக வாகனங்கள் சென்று வரக்கூடிய இந்த பாலத்தில் இன்று திடீரென ஒரு தூண் உள்வாங்கியது.
  • தற்போது பாலத்தின் வழியே இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லக்கூடிய அளவில் வழி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே கீழக்காட்டூர் கிராமத்தில் இருந்து புழுதிக்குடி செல்லும் வழியில் மண்ணி ஆற்றுப் பாலம் உள்ளது.

கனரக வாகனங்கள் சென்று வரக்கூடிய இந்த பாலத்தில் இன்று திடீரென ஒரு தூண் உள்வாங்கியது. இதனால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் பாலத்தின் வழியே கனரக வாகனங்கள் இயக்காத அளவு தடுப்பு கம்புகள் வைத்து கட்டி வருகின்றனர்.

மேலும் இரு புறமும் கனரக வாகனங்கள் செல்ல கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். தற்போது பாலத்தின் வழியே இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்லக்கூடிய அளவில் வழி இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்

சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம் திடீரென உள்வாங்கியதால் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் புழதிக்குடி கிராமம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளது.

அவசரத்திற்கு மருத்துவமனை செல்வதற்கும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக புதிய பாலத்தை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News