உள்ளூர் செய்திகள்

ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் கொடை விழா- பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

Published On 2023-05-04 08:45 GMT   |   Update On 2023-05-04 08:45 GMT
  • 4-வது நாள் விழா அன்று சுவாமிகள் மஞ்சள் நீராடினர். பின்னர் கடலில் தீர்த்தம் கும்பம் எடுத்து வந்தனர்.
  • நேற்று மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்பம் எடுத்து வீதிஉலா நடைபெற்றது.

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவில் சித்திரை கொடை விழா 7 நாட்கள் நடைபெற்றது. விழா நாட்களில் காலை, மாலை மற்றும் இரவில் சிறப்பு பூஜையும் ,வில்லிசையும் நடந்தன.

முதல் நாளில் யாக பூஜை மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. 4-வது நாள் விழா அன்று சுவாமிகள் மஞ்சள் நீராடினர். பின்னர் கடலில் தீர்த்தம் கும்பம் எடுத்து வந்தனர்.அம்பாள் சரஸ்வதி திருக்கோலத்தில் அம்மன் காட்சியருளல் நடந்தது. 5- வது நாளில் மஞ்சள் நீராடல் மற்றும் தாமிரபரணி ஆற்றில் நீராடல் நடந்தது.

இரவில் சிறுவர்- சிறுமியர் ஆயிரங்கண் பானை மற்றும் மாவிளக்கு பெட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், பெண்கள் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

6-வது நாளான நேற்று மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்பம் எடுத்து வீதிஉலா நடைபெற்றது.நிறைவு நாளான இன்று காலையில் அம்மனுக்கு தீர்த்தவாரி அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தன. பின்னர் அன்னதானம் நடை பெற்றது. நிகழ்ச்சி களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் தனசேகரன், ராதா கிருஷ்ணன், தங்க பாண்டி யன் உள்பட பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News