உள்ளூர் செய்திகள்

போதை பொருட்களை ஒழிக்க கோரி அரியலூரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாடடம்

Published On 2022-07-31 14:56 IST   |   Update On 2022-07-31 14:56:00 IST
  • போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார்

அரியலூர் :

தமிழகத்தில் போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், இளைய தலைமுறையினரை சீரழிக்கும் கஞ்சா, குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் வணிகத்தைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். செயலர் காடுவெட்டி ரவி, மாநில துணைப் பொதுச் செயலர் திருமாவளவன், நகரச் செயலர்கள் விஜி,பரசுராமன், ஒன்றியச் செயலாளர்கள் சக்திவேல்,சங்கர், குரு, செம்மலை மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு போதைப் பொருள்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Tags:    

Similar News