உள்ளூர் செய்திகள்

வட்டார அளவிலான கலை போட்டிகள்

Published On 2023-10-19 08:16 GMT   |   Update On 2023-10-19 08:16 GMT
அரியலூர், ஜெயங்கொண்டத்தில்வட்டார அளவிலான கலை போட்டிகள்

அரியலூர்,  

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் தொடங்கியது.

அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற போட்டியை அரியலூர் நகர மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், துணைத் தலைவர் கலியமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இரா. முருகேசன்ஆகியோர் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி வைத்து தொடக்கி வைத்தனர்.

வட்டார கல்வி அலுவலர்கள் வி.நீலமேகம், வி. கலியபெருமாள், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ந.தமிழரசி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அ.செல்வராஜ், அஸ்தினாபுரம் மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் அ.வேல்முருகன், அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ச.உமா, கலைத் திருவிழா போட்டி ஒருங்கிணைப்பா ளர் மீரா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழித் திறன், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கிராமிய நடனம், கும்மிப்பாட்டு, வில்லு ப்பாட்டு, நாட்டுப்புறை இசை, மயிலாட்டம், ஒயிலா ட்டம் உள்ளிட்ட போட்டிகள் வரும் 21ந்தேதி வரை நடத்தப்படுகிறது.

மேற்கண்ட போட்டிகளில் அரியலூர் வட்டாரத்துக்குள் உட்பட்ட பள்ளிகளில் இருந்து 800 மாணவ, மாண விகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிகாட்டி வருகின்றனர். இதில் வெற்றிப் பெற்று முதல் மூன்று இடங்களை பெறும்மா ணவ, மாண விகள் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டி யில் கலந்து கொள்ள உள்ளனர்.முன்னதாக வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் பெ.ராஜே ஸ்வரன் வரவேற்றார்.

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளி திட்டத்தின் கீழ் கலைத்திருவிழா போட்டி  புதன்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த பள்ளி மாவட்டத் திட்ட உதவி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் மதலைராஜ், ராசாத்தி, வட்டார வளமைய மேற்பா ர்வையாளர் கண்ணதாசன், அரசு மகளிர் உயர்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி ஆகியோர் முன்னி லை வகித்தனர். முன்னதாக ஜெயங்கொ ண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தவிக்குமார் வரவேற்றார்.

Tags:    

Similar News