உள்ளூர் செய்திகள்

பட்டா மாறுதலுக்கு இனி வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்

Published On 2023-02-02 07:52 GMT   |   Update On 2023-02-02 07:52 GMT
  • அரியலூர் கலெக்டர் ரமணசரஸ்வதி தகவல்
  • பட்டா மாறுதலுக்கு இனி வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அரியலூர்:

அரியலூர் மாவடட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்வதை தவிர்க்கும் வண்ணம், பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே எங்கிருந்தும் எந்நேரமும் உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணத்தை இணையம் வாயிலாக பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும், உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணத்தை இணையம் வாயிலாக செலுத்தவும், பட்டா மாறுதலின் நடவடிக்கையின் ஒவ்வொரு நிலையையும், மனுதாரருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கும் வசதிகளையும் கொண்ட இணையத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை) அறிமுகம் செய்துள்ளது.இவ்விணையதளத்தில் உள்ள வசதிகள் இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம்.பட்டா மாறுதல் மனுவின் நிலையினை உடனுக்குடன் தெரிந்து கொள்ள , பட்டாமாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா (புலப்படம்), அ-பதிவேடு ஆகியவற்றை எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவையின் கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ள இணையத்தை அரியலூர் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News