உள்ளூர் செய்திகள்

தொழிலாளி மர்ம சாவு

Published On 2023-07-17 12:10 IST   |   Update On 2023-07-17 12:10:00 IST
  • அரியலூர் நாகல்குழியில் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்
  • உடலை பைப்பற்றி போலீசார் விசாரணை

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் நாகல்குழி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் செல்வராசு. இவர் தனது வீட்டில் மனைவியின் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் அவரது மகள் தந்தையின் வீட்டிற்கு காலை வேலையில் சென்றபோது தனது தந்தை பிணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளார். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்தபோது செல்வராஜ் உடல் தூக்கில் தொங்கியபடி காலில் ரத்தம் சொட்டியபடி இருந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உறவினர்கள் இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் செல்வராசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News