உள்ளூர் செய்திகள்

தமிழ் தாய்மொழியை பாதுகாக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

Published On 2023-03-26 11:49 IST   |   Update On 2023-03-26 11:49:00 IST
  • அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என வலியுறுத்தல்
  • இளையோர் பாராளுமன்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சு

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் அருகேயுள்ள தனியார் கல்லூரியில், பெரம்பலூர் நேரு இளையோர் மையம் சார் பில் மாவட்ட அளவிலான இளையோர் பாராளுமன் றம் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். இதனை போக்கு–வரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-நம்முடைய வாழ்க்கை ஒரு சாதரண மனிதனின் வாழ்க்கையை போல முடிந்து விடாமல் நம்முடைய சமுதாயத்துக்கு பயன்படும்படியாக இருக்க வேண்டும் என்பதற்காக நேரு இளையோர் மையம் என்ற அமைப்பு ஏற்ப–டுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள், இளை–ஞர்களை இணைத்து ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியது பொதுமக்களின் கடமையா–கும்.

தமிழ்நாடு ஜனநாயத்தை பாதுகாப்பதில் இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. சொந்த தாய்மொழியை பாதுகாக்க போரிட்டவர்கள் நமது தமிழர்கள் ஆவார். பேசும் மொழி நமது அடையாளம் ஆகும். மகராஷ்ட்ராவில் இந்தி மொழியை பேசியதால், அவர்களது தாய்மொ–ழியான மராட்டிய மொழியை மறந்து, தமது அடையாளத்தை இழந் துள்ளனர். தற்போது அவர்கள் இந்தி திணிப்பு எதிர்ப்பு தெரிவித்து, தாய் மொழிக்காக போராடி வரு–கின்றனர்.

எனவே நமது அடையாளத்தை இழக்கக்கூடாது. நமது மொழியை பாதுகாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தமிழகத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி தமிழக அரசு தொடர்ந்து போராடி வருகிறது.

தமிழகத்தில் உயர்க்கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை 52 சதவீதம் ஆகும். இதற்கு காரணம் பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள முதல்வர் கருணாநிதி ஆகியோர்களால் செயல்படுத்திய கல்வித் திட்டங் களே ஆகும். அவர்கள் வழியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கல்விக் காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். படித்த இளைஞர்கள் திறன் பயிற்சியுடன் வேலை வாய்ப்பை பெற வேண் டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.மாணவிகள் உயர்க்கல்வி படிக்கும் போது மாதம் ரூ.1,000 பெறும் வகையில் புதுமைப் பெண் திட்டத் தையும் செயல்படுத்தியுள் ளார். இது போன்ற நடவடிக்கைகளால் தமிழகம் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது என்றார்.நிகழ்ச்சியில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசுகையில், இந்தியாவில் கல்வி உதவித் தொகை குறைக்கப்பட்டதின் காரணமாக உயர்கல்வி படிப் போர்களின எண்ணிக்கை நாளுக்கு குறைந்து வருகிறது. இதுகுறித்து மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். படிக்கும் போதே மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு, அரசியல் விழிப்புணர்வு இருக்க வேண்டும். மாணவர்கள் ஆழமான கருத்தை உள்வாங்கி படிக்க வேண்டும். குறிப் பாக கல்வியில வேட்கை உருவாக்கிக் கொள்ளவேண்டும். கல்வி மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் என்றார்.

Tags:    

Similar News