உள்ளூர் செய்திகள்
கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம்
- கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- பக்ருதீனை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடிப்பள்ளத்தெருவைச் சேர்ந்த பஷீர் மகன் பக்ருதீன்(வயது22). தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த பக்ருதீனை ஜெயங்கொண்டம் காவல் துறையினர் கடந்த 2ந் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில் பக்ருதீனை குண்டர் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் வழங்கினர்.