உள்ளூர் செய்திகள்

வீட்டில் இருந்த பெண் மாயம்

Published On 2023-04-06 12:46 IST   |   Update On 2023-04-06 12:46:00 IST
  • வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு திரும்பிய கணவர் அதிர்ச்சி
  • புகாரின் பேரில் தேடி வரும் போலீசார்

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருக்காலங்குறிச்சி கிராமம் அரிச்சனத் தெருவை சேர்ந்தவர் வீரமணி.வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.தற்பொழுது விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளார்.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரது மனைவி ராணி (வயது40). வீட்டில் இருந்த இவர் திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வீரமணி அக்கம் பக்கத்தில், உறவினர்கள், தோழிகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன ராணியை தேடி விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News