வீடு இல்லாத மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க கோரிக்கை
- வீடு இல்லாத மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்
அரியலூர்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
அரியலூர், திருமானூர், செந்துறை ஒன்றியங்களில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு குடிமனைப்பட்டாவும், இலவச வீட்டு மனையும் வழங்கிட வேண்டும். அரசு தரிசு புறம்போக்கு மடம், கோயிலுக்கு சொந்தமான இடங்களை வகை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரில் வீடுகளை இடித்து தள்ளிய தமிழக அரசு, தரிசு புறம்போக்கு இடங்களை கண்டறிந்து ஏழை, ஏளிய மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் பட்டா வழங்கி, வீடு கட்டி கொடுக்க வேண்டும். இலவச வீட்டு மனை வேண்டி கடந்த 1995-2002 வரை மனு அளித்த மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு, அக்கட்சியின் ஒன்றிய செயலர் அருணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், கந்தசாமி, திருமானூர் ஒன்றிய செயலர் புனிதன், செந்துறை வட்டச் செயலர் அர்ச்சுணன், மாவட்ட குழு உறுப்பினர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.