உள்ளூர் செய்திகள்

அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

Published On 2023-07-27 12:18 IST   |   Update On 2023-07-27 12:18:00 IST
  • கீழராயம்புரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
  • சாலையின் நடுவே சாக்கடை ஓடும் அவலம்

செந்துறை, 

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கீழராயம்புரம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் தெற்கு தெருவில் உள்ள கிராம மக்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி மண் சாலையில் சென்று வருகின்றனர். தற்போது இந்த சாலையில் ஆங்காங்கே உள்ள குடியிருப்புகளில் உள்ள கழிவு நீர் தேங்கி நடக்க முடியாத நிலையில் சாக்கடையில் நடந்து செல்லும் அவநிலையில் இருக்கின்றனர்.இதனால் அப்பகுதி பொதுமக்களும், மாணவ, மாணவிகளும், பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.எனவே தெற்கு தெருவில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News