செந்துறை போலீசாரை கண்டித்து கடையடைப்பு
- செந்துறை போலீசாரை கண்டித்து கடையடைப்பு நடைபெற்றது
- முத்துசாமி என்பவர் மர்மான முறையில் உயிரிழந்தார்
அரியலூர்:
செந்துறை அருகேயுள்ள ஆர்.எஸ்.மாத்தரில் காவல் துறையை கண்டிதது கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த பெரியாக்குறிச்சி கிராமத்தில் முத்துசாமி என்பவர் மர்மான முறையில் உயிரிழந்தார். இது குறித்து அவரின் உறவினரான தமிழ்ப்பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலாளர் முடிமன்னன், செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு பெரியாக்குறிச்சியில் முத்துசாமியின் உடலைப் பார்க்க சென்றார். அப்போது அவரை பார்க்கவிடாமல் போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து முத்துச்சாமியின் உடலை பார்க்க விடாமல் தடுத்த செந்துறை காவல் உதவி ஆய்வாளர் தன்ராஜை கண்டித்து ஆர்.எஸ்.மாத்தூர் பகுதியில் உள்ள கடைகளை அடைத்து வியாபாரிகளும் பொதுமக்களும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிடில் வருகிற 8-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் கவுதமன் தெரிவித்துள்ளார்.