உள்ளூர் செய்திகள்
- அரியலூரில் லாரி மோதி தனியார் நிறுவன மேலாளர் பலியானார்
- அரியலூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர்
அரியலூர்,
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி, குழிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன்(வயது 62). இவர் தற்போது அரியலூர், வடக்கு மாரியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில், ஓட்டக்கோவிலுள்ள ஒரு தனியார் சிமெண்ட் ஆலைக்கு இருசக்கர வாகனத்தி ல் பெரம்ப லூர்-தஞ்சாவூர் புறவழி சாலையோரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புக் ஏற்றிக் கொண்டு வந்த 2 லாரிகளில் ஒன்று, மோதியதில் சம்பவ இடத்திலேயே கதிரேசன் உடல் நசுங்கி உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் அரியலூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம், அடுத்த ஆனாபுரியை சேர்ந்த டிரைவர் மகாலிங்கம் (55) என்பவரை போலீசார் கைது செய்தனர்.