உள்ளூர் செய்திகள்

வரதராஜன் பேட்டையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

Published On 2022-07-22 13:42 IST   |   Update On 2022-07-22 13:42:00 IST
  • வரதராஜன் பேட்டையில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
  • சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வரதராஜன் பேட்டை பேரூராட்சியில் அலங்கார அன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மார்க்கரேட் அல்போன்ஸ் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜாக்குலின் முன்னிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா. சொ. கா. கண்ணன் தொடங்கி வைத்தார். மேலும் முகாமில் சுகாதார அதிகாரிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் சிறப்பாக பணியாற்றினர் இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவை பெற்று பயனடைந்தனர்.

அதன் பிறகு சட்டமன்ற உறுப்பினர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பிரசவ வார்டுகளை ஆய்வு மேற்கொண்டார். வரதராஜம்பேட்டை பேரூராட்சியில் வார்டு உறுப்பினர்களை சந்தித்து பேரூராட்சியில் உள்ள குறைகளை கேட்டு அறிந்து நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதில் வார்டு கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News