உள்ளூர் செய்திகள்

காவலன் செயலி விழிப்புணர்வு நடைபெற்றது.

Published On 2022-07-08 14:30 IST   |   Update On 2022-07-08 14:30:00 IST
  • காவலன் செயலி விழிப்புணர்வு
  • இந்தச் செயலியை தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால் தனியாகச் செல்லும் பெண்கள், முதியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு

அரியலூா் :

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மற்றும் மாணவா்களுக்கு காவலன் செயலி குறித்து காவல் துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்தினா். கயா்லாபாத் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோவிந்தசாமி தலைமையிலான காவல் துறையினா், பயணிகளைச் சந்தித்து, காவலன் செயலி குறித்தும், இந்தச் செயலியை தங்களது கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து கொண்டால் தனியாகச் செல்லும் பெண்கள், முதியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக அமையும் என்று தெரிவித்தனா்."

Tags:    

Similar News