உள்ளூர் செய்திகள்
ஆனந்தவாடி கிராம இளைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு
- ஆனந்தவாடி கிராம இளைஞர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- நிலம் கொடுத்தவர்களுக்கு பணி வழங்க வேண்டும்
அரியலூர்:
அரிலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் ரமணசரஸ்வதியிடம் ஆனந்தவாடி கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் அரியலூரில் இயங்கி வரும் அரசு சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்க பயன்பாட்டுக்காக நிலம் கொடுத்த ஆனந்தவாடி கிராம மக்களுக்கு உத்தரவாதம் அளித்தபடி, ஆலையில் இதுவரை நிரந்தர பணி வழங்கவில்லை. எனவே நிலம் கொடுத்த எங்களுக்கு ஆலையில் வேலை வழங்காவிட்டால், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அரசிடமே ஒப்படைப்போம் என தெரிவித்துள்ளனர்.