உள்ளூர் செய்திகள்

சிறுவளூர் அரசு பள்ளி சார்பில் காகித பை விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-07-13 12:29 IST   |   Update On 2023-07-13 12:29:00 IST
  • சிறுவளூர் அரசு பள்ளி சார்பில் காகித பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
  • நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார்.

அரியலூர்,

காகிதப் பை தினத்தையொட்டி, அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் சார்பில் அவ்வூரிலுள்ள கடைகளுக்கு காகித பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முன்னதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அரியலூர் அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியர் அறிவொளி, சுற்றுச்சூழல் துறை உதவி பேராசிரியர் அனிதா கலந்து கொண்டு காகிதப் பை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியைத தொடர்ந்து, ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவிகள் அனைவரும் ஒவ்வொரு கடைகளுக்குச் சென்று தயாரிக்கப்பட்ட காகிதப் பைகளை வழங்கினர். நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவர் அம்பிகா, துணைத் தலைவர் பழனியம்மாள், பள்ளி மேலாண்மை குழு துணைத் தலைவர் ரேவதி, ஆசிரியர்கள் தனலட்சுமி, செவ்வே, தங்கபாண்டி , இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முடிவில் ஆசிரியை செந்தமிழ் செல்வி நன்றி கூறினார்.

Tags:    

Similar News