உள்ளூர் செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்

Published On 2022-07-27 15:24 IST   |   Update On 2022-07-27 15:24:00 IST
  • ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
  • வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க தேவையான ஆலோசனை வழங்கினார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 33 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அன்புசெல்வன் வரவேற்று பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) செந்தில்குமார் தலைமை தாங்கினார். தா.பழூர் ஒன்றியத்துக்கான மண்டல அலுவலர் மற்றும் மாவட்ட ஊராட்சி செயலாளர் சிவக்குமார் கலந்து கொண்டு, ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களிடம் கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், 15-வது நிதிக்குழு மானிய திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். வளர்ச்சி பணிகளை விரைவாக செய்து முடிக்க தேவையான ஆலோசனைகளை வழங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News