உள்ளூர் செய்திகள்
வேளாண் பொறியியல் ஆய்வகம் திறப்பு
- அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் பொறியியல் ஆய்வகம் திறப்பு
- அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு வேளாண் ஆய்வகத்தினை திறந்து வைத்து பேசினார்
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகேயுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வேளாண் பொறியியல் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.விழாவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு வேளாண் ஆய்வகத்தினை திறந்து வைத்து பேசினார். விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கு.தமிழரசு, வேளாண் பொறியியல் துறைத் தலைவர் ம.அப்பூதி அடிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.