உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா
- ஜெயங்கொண்டம் அருகே மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
- இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மணக்கரை கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு திருச்சி சாலையில் உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோவிலில் 50-க்கும் மேற்பட்டோர் அலகு குத்தி காவடி எடுத்து கடைவீதி, நான்கு ரோடு, சின்ன வளையம் வழியாக மணக்கரை கிழக்குத் தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்றடைந்தனர். மேலும் மகா மாரியம்மன், மதுரை வீரன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு 16 வகையான திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.