உள்ளூர் செய்திகள்

ரூ.46.14 கோடி மதிப்பில் கடன் உதவி

Published On 2023-10-01 08:30 GMT   |   Update On 2023-10-01 08:30 GMT
  • அரியலூரில் 612 பயனாளிகளுக்கு ரூ.46.14 கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கப்பட்டது
  • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் வசதியாக்கல் முகாம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், தாட்கோ திட்டம் , மகளிர் திட்டம் மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை அரசு அலுவலகங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்டு வங்கி கிளையில் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களை வங்கி மேலாளர்களின் மூலம் பரிசீலினைச் செய்யப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு கடன் ஆணையும், பட்டுவாடா ஆணையும் வழங்கப்பட்டது. இம்முகாமில் பயிர்கடன், தனிநபர் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், கால்நடை பராமரிப்பு கடன், கல்விக்கடன், குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான கடன் உள்ளிட்ட 612 பயனாளிகளுக்கு ரூ.46.14 கோடி கடன் உதவிக்கான ஆணையினை மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார். மேலும், 2023-24ஆம் ஆண்டில் மாவட்ட தொழில் மையம், அரியலூர் மூலம், செயல்படுத்தப்படும் திட்டங்களின்கீழ் சிறப்பாக கடனுதவி வழங்கிய பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஐ.டி.பி.ஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி போன்ற வங்கி கிளை மேலாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் லட்சுமி, முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் லாயனல் பேனிடிக்ட், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News