உள்ளூர் செய்திகள்

அரியலூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி

Published On 2022-12-26 15:20 IST   |   Update On 2022-12-26 15:20:00 IST
  • அரியலூர் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி தொடங்க ேவண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
  • கூட்டம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தமிழ் பண்பாட்டுப்பேரமைப்பு கூட்டம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பின் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நல்லப்பன் கலந்து கொண்டு சங்க செயல்பாடுகள், கடந்தாண்டு புத்தகத் திருவிழா வரவு செலவு குறித்து பேசினார்.இந்த கூட்டத்தில், வரும் ஆண்டுகளில் தமிழக அரசு சார்பில் அரியலூரில் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவில், அரியலூரில் 6 ஆண்டுகளாக புத்தகத் திருவிழா நடத்தி வரும் தமிழப் பண்பாட்டுப் பேரமைப்பையும், பப்பாசி யையும் இணைத்துக் கொள்ள தமிழக அரசிடம் வலியுறுத்துவது, புத்தகத் திருவிழாவில் அமைச்சர் உதயநிதியை அழைப்பது, பேரமைப்பு சார்பில் இனி வரும் காலங்களில் கருத் தரங்கு, கலைநிகழ்ச்சி, போட்டிகள் உள்ளிட்டவைகள் நடத்துவது,அரியலூர் அல்லது ஜெயங்கொண்டத்தில் சட்டக் கல்லூரி அமைக்க வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத் தலைவர் புலவர் இளங்கோவன், பொருளாளர் புகழேந்தி, செய்தித் தொடர்பாளர் தமிழ் களம் இளவரசன், நிர்வாகிகள் சிவக்கொழுந்து, செந் துறை அய்யம்பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News