உள்ளூர் செய்திகள்

உடையார் பாளையம் ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

Published On 2023-05-25 11:32 IST   |   Update On 2023-05-25 11:32:00 IST
உடையார் பாளையம் ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் திருச்சி ரோட்டு தெருவில் ஸ்ரீ இன்ப மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி கணபதி ேஹாமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 4 நாட்கள் 6 கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் மஹாபூர்னாகுதி, மகா தீபாரதனை நடைபெற்று புனித நீர் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்றது.வேத விற்பன்ன ர்கள்மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கை அதிர,கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அப்போது கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள், ஓம் சக்தி பராசக்தி என்று பக்தி பரவசத்துடன் கோஷங்களை எழுப்பினர்.விழா ஏற்பாடுகளை முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் க.வெங்ட்ராமன், தர்மகர்த்தா சூரியநாராயண், நாட்டார்கள் இளங்கோவன், தர்மன், மற்றும் விழா திருப்பணி குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.



Tags:    

Similar News