அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை
- அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் நகை கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவுகாரர் போல் பேசி மர்ம நபர் கைவரிசை
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவர் விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சுரேஷ் குமார் தத்தனூர் தனியார் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இதனை அறிந்த மர்ம நபர், ஆசிரியர் வீட்டிற்கு வந்து, ஆசிரியர் மனைவி எழிலரசியிடம் , உறவுக்காரர் போல் பேசியுள்ளார்.
மேலும் புதுமனை விழாவிற்க்கு மா இலை வேண்டும் கொஞ்சம் ஒடித்து கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆசிரியர் மனைவி எழிலரசி எதிர் வீட்டில் மா இலை பறித்து வந்து கொடுத்த நிலையில் மர்ம நபர் வாங்கி கொண்டு சென்றுள்ளார்.
சிறிது நேரம் சென்ற எழிலரசி வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைந்து இருந்தது. அதில் இருந்த சுமார் 1.60 லட்சம் மதிப்பிலான 8 பவுன் நகையை திருடு போயிருந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.