உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் வட மாநில தொழிலாளகளிடம் பணம் பறித்த 2 பேர் கைது
- வட மாநில தொழிலாளகளிடம் பணம் பறித்த 2 பேர்
- அரசு மருத்துவமனையில் வட மாநில தொழிலாளகளிடம் பணம் பறித்த 2 பேர் கைது
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில் வட மாநில தொழிலாளர்கள் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சார்ந்த வசீகரன் (21), மற்றும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை தெருவை சேர்ந்த முகமது யாசிக் (20), ஆகியோர் அங்கு பணியில் ஈடுபட்டு வரும் 2 வட மாநில தொழிலாளர்களிடம் பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து ஒப்பந்ததாரர் லட்சுமண சாமி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வசீகரன் மற்றும் முகமது ஆசிக் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.