உள்ளூர் செய்திகள்

ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2023-09-21 12:09 IST   |   Update On 2023-09-21 12:09:00 IST
  • அரியலூரில் ஒருங்கிணைப்பாளர்கள் பணிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
  • மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம் மீட்கப்பட்ட கொத்தடிமைக்களுக்கான மறுவாழ்வு திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டுக்கு பணிபுரிந்திட 1 மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் 2 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றவராக இருத்தல் வேண்டும். களப்பணியில் 3 முதல் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். மக்கள் தொடர்பியல் மற்றும் பேச்சு ஆற்றல் உள்ளவராக இருத்தல் வேண்டும். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

ஓட்டுநர் உரிமம் பெற்று இரு சக்கர வாகனம் வைத்திருத்தல் வேண்டும். மாத மதிப்பூதியமாக ரூ.15,000 மற்றும் பயணப்படி ரூ.5,000 வழங்கப்படும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மீட்கப்பட்ட கொத்தடிமையினராகவோ, பழங்குடியினரை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.மாத மதிப்பூதியமாக ரூ.3,000 மற்றும் பயணப்படி ரூ.1,000 வழங்கப்படும். விண்ணப்பங்கள் வெள்ளைத்தாளில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்து பிரதியாகவோ இணை இயக்குநர் , திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், அரியலூர்- 621704, என்ற முகவரிக்கு 22ந்தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News