உள்ளூர் செய்திகள்

மருந்தகங்களில் கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குநர் ஆய்வு

Published On 2022-08-08 06:56 GMT   |   Update On 2022-08-08 06:56 GMT
  • மருந்தகங்களில் கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் இயக்குநர் ஆய்வு மேற்கொண்டார்.
  • குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கவும் அறிவுறுத்தினார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் கடுகூர் மற்றும் வீராக்கன் ஆகிய இடங்களிலுள்ள கால்நை மருந்தகங்களில் கால்நடை பராமரிப்புத் துறை கூடுதல் இயக்குநர் ஆய்வு செய்தார்.

அப்போது அவர், கால்நடை மருந்தகத்துக்கு தினசரி வரும் எண்ணிக்கை, சிகிச்சை முறைகள், முதலுவி மற்றும் அவசர அறுைவ சிகிச்சைகளுக்கு தேவையான மருந்து இருப்பு, தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசியின் பயன்பாட்டு விவரம் மற்றும் பயனடைந்த ஆடுகளின் எண்ணிக்கை குறித்து கடுகூர் கால்நடை மருத்துவரிடம் கூடுதல் கேட்டறிந்தார். மேலும் மருத்துவக் கழிவுகளை முறையாக சேகரித்து குறித்த காலத்தில் பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கால்நடை மருந்தகத்தைச் சுற்றியுள்ள இடங்களில் கால்நடைகளுக்காகப் பராமரிக்கப்பட்டு வரும் தீவன மரங்கள் மற்றும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான மகளிரை தொழில்முனைவோராக கொண்டு வெள்ளாடு வளர்க்கும் திட்டததின் கீழ் வழங்கப்பட்ட ஆடுகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிடடு ஆடுகளை முறையாக பராமரிக்கவும், அவ்வப்போது கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பூசி செலுத்தவும் குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கவும் அறிவுறுத்தினார்.

பின்னர் உடையார் பாளையத்தை அடுத்த வீராக்கன் கால்நடை மருந்தகத்துக்கு சென்று அங்கு கால்நடை காப்பீடு திட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார். 

Tags:    

Similar News