உள்ளூர் செய்திகள்

அதிக தூக்க மாத்திரைகளை தின்றவர் சாவு

Published On 2023-07-09 11:43 IST   |   Update On 2023-07-09 11:43:00 IST
  • அதிக தூக்க மாத்திரைகளை தின்றவர் இறந்தார்.
  • இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் :

அரியலூர் மாவட்டம், திருமானூர் திடீர் குப்பம் பகுதிைய சேர்ந்தவர் ஈஸ்வரன்(வயது 21). இவர் மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதிக தூக்க மாத்திரைகளை தின்ற அவர், மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News