உள்ளூர் செய்திகள்
- கஞ்சா விற்றவர் கைது செய்யப்படார்
- போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி உட்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக மீன்சுருட்டி காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
அதன் அடிப்படையில் நேற்றிரவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் கோகுல்ராஜ் மற்றும் சிலர் கோழி பண்ணை அருகே கஞ்சாவை விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து, அவர்களிடமிருந்த ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பிறகு அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்ற வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.