உள்ளூர் செய்திகள்

வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

Published On 2023-03-24 06:44 GMT   |   Update On 2023-03-24 06:44 GMT
  • வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
  • நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகளில்

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகளில் பொதுமக்களிடம் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, வரியில்லா இனம் மற்றும் குத்தகை இனம் உள்ளிட்ட வரிகள் வசூல் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.5 கோடி வரி வசூல் பாக்கி உள்ள நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிகாரிகள் நகராட்சி ஆணையர் மூர்த்தி, மேலாளர் அன்புச்செல்வி, பொறியாளர் ராஜகோபாலன் மற்றும் நகராட்சி குடிநீர் பொருத்துனர் பாண்டியன் உள்ளிட்ட பணியாளர்கள் சேர்ந்து அதிரடியாக வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வரியில்லா இனம், குத்தகை இனம் செலுத்த வேண்டியவற்றை தற்போது நகராட்சி நிர்வாகம் அதிரடியாக தீவிர வசூலில் இறங்கி உள்ளது. நேற்று சின்னவளையம் மற்றும் கீழக்குடியிருப்பு பகுதிகளில் வரி செலுத்தாத 18 பேரின் குடிநீர் இணைப்பை துண்டித்துள்ளனர். மேலும் இதுபற்றி நகராட்சி ஆணையர் கூறும்போது, வரி செலுத்த தவறுவோர் மீது ஜப்தி நடவடிக்கை, குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட மேல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வாரம் ஜெயங்கொண்டம் அண்ணாசிலை பகுதியில் குடிநீர் வரி செலுத்தாத வீடுகளில் உடனடியாக குடிநீர் இணைப்புகளை துண்டித்து அதிரடி வரி வசூல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.fil 

Tags:    

Similar News