உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

Published On 2023-05-12 10:54 IST   |   Update On 2023-05-12 10:54:00 IST
  • அரியலூரில் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற்றது
  • கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர்:

அரியலூர் பல்துறை வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட மன்றத்தில் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சந்திரசேகர் தலைமையில், துணைதலைவர் அசோகன் முன்னிலையில் நடைபெற்றது. அலுவலக செயலாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் அம்பிகா, ராமச்சந்திரன், நல்லமுத்து, குலக்கொடி, வசந்தமணி, சகிலாதேவி, ராஜேந்திரன், அன்பழகன், தனசெல்வி, கீதா, அலுவலக இளநிலை உதவியாளர் ரமேஷ், சிவக்குமார் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் அரசின் திட்டபணிகள் மக்களுக்கு சென்று சேர விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏரி குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் ஏரிகுளம் நீர்வரத்து வாய்க்கால் பகுதிகளில் சுண்ணாம்புகல் சுரங்கம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News