அரியலூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி
- அரியலூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது
- 11,14,17,19 வயதுக்குடைய மாணவ, மாணவிகள் 148 பேர் கலந்து கொண்டனர்
அரியலூர்,
அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட வருவாய் அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே செஸ் போட்டி நடைபெற்றது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன் தலைமை வகித்தார். போட்டியை பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராஜ் தொடக்கி வைத்து பேசினார். போட்டியில், அரியலூர், செந்துறை, தா.பழூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், திருமானூர் ஆகிய ஒன்றிய அளவில் நடைபெற்ற குடியரசு தின சதுரங்கப் போட்டியில் வெற்றிப் பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற 11,14,17,19 வயதுக்குடைய மாணவ, மாணவிகள் 148 பேர் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றிப் பெற்று முதல் இடங்களைப் பெறும் மாணவ,மாணவிகள் விழுப்புரத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வர். மேற்கண்ட போட்டிக்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரவி, உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், கீழப்பழுவூர் உடற்கல்வி ஆசிரியர் அருண்மொழி ஆகியோர் செய்திருந்தனர்.