உள்ளூர் செய்திகள்

வெடிவிபத்தில் இறந்தவர்களின் உடல் தகனம்

Published On 2023-10-11 12:20 IST   |   Update On 2023-10-11 12:20:00 IST
வெடிவிபத்தில் இறந்தவர்களின் உடல் நள்ளிரவில் தகனம் செய்யப்பட்டது

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகாலூரில் செயல்பட்ட யாழ் அன்ட் கோ என்ற நாட்டுவெடி தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் பலியாகினர். மேலும் 6 பேர் தஞ்சை மருத்துவ கல்லூரியிலும், 7 பேர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக வெடி ஆலையின் உரிமையாளர் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், அவரின் மருமகன் அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வெடி விபத்தில் உயிரிழந்த திடீர்குப்பத்தை சேர்ந்த ரவி, அவரது மனைவி சிவகாமி மற்றும் வெண்ணிலா, ராசாத்தி ஆகியோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் வீட்டிற்கு ஆம்பு லன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு, வீட்டின் முன் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து சுடுகாட்டிற்கு எடுத்து சென்று நள்ளிரவு 12 மணியளவில் தகனம் செய்யப்பட்டது. வெளியூரை சேர்ந்தவர்களின் சடலங்கள் அமரர் ஊர்தி வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News