உள்ளூர் செய்திகள்

அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சமரச மைய கூட்டம்

Published On 2023-01-12 06:27 GMT   |   Update On 2023-01-12 06:27 GMT
  • அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சமரச மைய கூட்டம்
  • அரியலூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சமரச மைய கூட்டம் நடைபெற்றது
  • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

அரியலூர்:

அரியலூர் வாலாஜா நகரத்திலுள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சமரச மைய கூட்டம் நடைபெற்றது. ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் வழக்குரைஞர்கள் மோகன், கதிரவன், இளவரசன், ஜெயராமன் மற்றும் லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள், நுகர்வோர் பாதுகாப்பு செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்து விவாதிக்கும் வகையில் அரியலூரில் நுகர்வோர் பாதுகாப்பு சட்ட ஆய்வரங்கம் ஒன்றை நடத்துவது, இந்த ஆய்வு அரங்கத்தை நடத்துவதற்கு விருப்பமுள்ள கல்வி நிறுவனங்களிடமிருந்து மனுக்கள் பெறுவது, அரியலூர் மாவட்டத்தை நுகர்வோர் பாதுகாப்பில் முன்னோடி மாவட்டமாக மாற்றும் வகையில் 50 தன்னார்வலர்களை தேர்வு செய்து நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நீதிபதி ராமராஜ் பேசியதாவது:- நுகர்வோர் பாதுகாப்பு சட்ட பயிற்சி பெற விருப்பமுள்ள இளைஞர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் சுயதொழில் புரிபவர்கள் உள்ளிட்டவர்கள் தங்கள் விவரங்கள் அடங்கிய சுயகுறிப்புடன் பயிற்சியில் கலந்துகொள்ள அஞ்சல் மூலம் சமரச மையம், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், வாலாஜா நகரம், அரியலூர் என்ற முகவரிக்கு வரும் 25-ம் தேதிக்குள் சாதாரண அஞ்சலில் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் நாள் மற்றும் இடம் குறித்த விவரங்கள் அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News