உள்ளூர் செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
- ஜெயங்கொண்டம் அருகே 150 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
- சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. கண்ணன் கலந்து கொண்டார்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் ஜெயங்கொண்டம் அருகே குருவாலப்பர் கோவில் தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சாருநிலா வரவேற்புரையாற்றினார். மாவட்ட திட்ட அலுவலர் அன்பரசி தலைமை வகி த்தார். சிறப்பு அழைப்பா ளராக எம்.எல்.ஏ. கண்ணன் கலந்து கொண்டு 150 கர்ப்பிணிகளுக்கு வளை யல் அணிவித்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில் மீன்சுருட்டி வட்டார மருத்துவர் மேகநா தன், ஊராட்சி மன்ற தலைவர் முல்லைநாதன், ஒன்றிய குழு செயலாளர் மணிமாறன், ஊட்டச்சத்து நிபுணர் அருள் ஜோதி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் நிலை ஒன்று தமயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.